26.6 C
Jaffna
January 30, 2025
Pagetamil
இலங்கை

பிற நாட்டு பீல்ட் மார்ஷல்களை படித்தறிந்து, அது போல நடவுங்கள்: பொன்சேகாவிற்கு சொன்னார் வீரசேகர!

பிற நாடுகளில் உள்ள பீல்ட் மார்ஷல்களை பற்றி படித்தறிந்து, அவர்களை போல நடந்து கொள்ளுங்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிற்கு அழைப்பு விடுப்பதாக தெரிவித்துள்ளார் பொதுப்பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர.

இன்று நாடாளுமன்றத்தில் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பாதாள உலகக்குழுவினருடன் எனக்கு தொடர்பு என சரத் பொன்சேகா தெரிவித்தார். உடற்பயிற்சி கூட அழைப்பொன்று எனக்கு வந்தது. அதில் கலந்து கொண்ட புகைப்படத்தைத்தான் சரத் பொன்சேகா காண்பித்தார். கடுவலை நகர மேயர்தான் அந்த அழைப்பு விடுத்தார்.

உடற்பயிற்சி கூடத்தின் மூலம் இளைஞர்கள் தவறான வழியில் செல்வது தடுக்கப்படும். இது பாதாள உலகத்திற்கு தொடர்பென்றால், சிறப்புரிமைகளிற்குள் ஒளிந்து கொள்ளாமல் சிஐடியில் முறையிடுங்கள். உண்மை என்னவென்பதை தெரிந்து கொள்வோம்.

பீல்ட் மார்ஷல் ன்பது உயரியது. இறக்கும் வரை சம்பளம், சலுகைகள் கிடைக்கும். அந்த பதவியுடன் பாராளுமன்றத்திற்கு வருபவர்கள், அதற்கு தகுதியாக, மக்களிற்கு சேவை செய்ய வேண்டும்.

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிற்கு இறுதியாக ஒரு அழைப்பு விடுகிறேன். இந்தியாவின் பீல்ட் மார்ஷல் மனிக் ஷோ பற்றி படித்தறியுங்கள். அவர் எவ்வளவு மேன்மையாக செயற்பட்டார் என படித்தறியுங்கள்.

தானும், இராணுவமும் வீழ்ந்தாலும் நாடு வெல்ல வேண்டுமென்றார். அப்படித்தான் வாழ்ந்தார். ஆனால் பொன்சேகா, இராணுவத்தை காட்டிக் கொடுத்தார். இராணுவத்தின் பிளேன்ரீ பற்றி கதைக்கிறார். யுத்தத்தின் போது வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த புலிகளை சுட்டுக்கொன்றதாக சர்வதேசத்திற்கு இராணுவத்தை காட்டிக் கொடுத்தார்.

நேற்றும், இன்றும் என்னைப்பற்றி தெரிவிக்கப்பட்ட பொய்யான தகவல்களை கன்சார்ட்டிலிருந்து நீக்க வேண்டுமென முன்மொழிகிறேன்’ என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மாவையின் புகழுடலுக்கு தமிழரசு பதில் தலைவர் சீ.வீ.கே அஞ்சலி

Pagetamil

ஹெரோயினுடன் கைதான இருவர் பொலிஸாரிடமிருந்து தப்பியோட்டம்

east tamil

அரிசி இறக்குமதியை நிறுத்த அரசாங்கம் முடிவு

east tamil

மாவையின் வரலாறு இளைஞர்களுக்கு அரசியல் பாடமாக அமையும்!

Pagetamil

அனுரவின் வருகைக்கு எதிரான போராட்டங்களுக்கு தடைகோரிய மனுக்கள் தள்ளுபடி

Pagetamil

Leave a Comment