2022 வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு அல்லது குழுநிலை விவாதம் மீதான வாக்கெடுப்பு இன்று மாலை நடைபெறவுள்ளது.
நிதியமைச்சு, பண மற்றும் மூலதன சந்தை மற்றும் அரச தொழில் முயற்சிகள் மறுசீரமைப்பு அமைச்சு, சமுர்த்தி வீட்டுப் பொருளாதாரம், நுண்நிதி, சுயதொழில் மற்றும் வர்த்தக அபிவிருத்தி ஆகிய அமைச்சுகளின் செலவினத் தலைப்புகள் இன்று பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு மாலை 5 மணிக்கு நடைபெறும்.
2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம், நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் நவம்பர் மாதம் 12ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு கடந்த நவம்பர் மாதம் 22ஆம் திகதி 93 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இதற்கு ஆதரவாக 153 நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிராக 60 நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாக்களித்தனர்.
குழு நிலை விவாதம் 16 நாட்களுக்குப் பிறகு முடிவடைகிறது.