26.3 C
Jaffna
January 26, 2025
Pagetamil
குற்றம்

பல காதலிகள்; நிர்வாண படங்கள் சமூக ஊடகங்களில்: ‘மன்மதராசா’ கைது!

காதலியின் நிர்வாண படத்தை, சமூக ஊடகங்களில் பதி​வேற்றம் செய்துவிட்டு, தலை​மறைவாகியிருந்த காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மொனராகலை ஒக்கம்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்​வெட்டமண்டிய பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒக்கம்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விடுதிக்கு காதலியை அழைத்துச் சென்று, உல்லாசமாக இருந்து, யுவதியை நிர்வாண புகைப்படம் எடுத்துள்ளார். அந்த புகைப்படங்களை சமூகஊடகங்களில்  பதிவேற்றிவிட்டு, தலைமறைவாகிய காதலனை மொனராகலை பிரதேச குற்றத்தடுப்பு பிரிவினர் கடந்த 6ஆம் திகதி கைது செய்துள்ளனர்.

பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்ற காலதன், கொழும்பு புறநகர் பகுதியில் தலைமறைவாக இருந்துள்ளார்.

இரகசிய முகவர் ஊடாக பொலிசார் அவருக்கு வலைவிரித்தனர். பாதிக்கப்பட்ட யுவதியென அந்த இளைஞனை தொடர்பு கொண்டு பேசியதில், மீண்டும் யுவதியுடன் உல்லாசமாக இருக்க ஒக்கம்பிட்டிய பகுதிக்கு வந்துள்ளார்.

அப்போது,  மொனராகலை குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸ் குழுவினர் அவரை கைது செய்தனர்.

இவர், பல பெண்களை ஏமாற்றி துஷ்பிரயோகம் செய்துள்ளார். அச்சம்பவங்களுக்காக தேடப்பட்டு வந்துள்ளார்.

அவர், பல பெண்களை காதலித்துள்ளார். அந்த காதலிகளை நிர்வாணமாக புகைப்படம் எடுத்தும், வீடியோக்களை எடுத்தும் வைத்துள்ளார். அவற்றை, உறவினர்கள் மற்றும் இணையத்தளங்களுக்கும் அனுப்பிவைத்துள்ளார் என்பதும் விசாரணைகளில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக,புத்தள பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கடித்துக் குதறிய கணவன்; மனைவிக்கு உதட்டில் 16 தையல்கள்

east tamil

உடுவில் பிரதேசத்தில் 330 லீற்றர் கோடாவுடன் ஒருவர் கைது!

Pagetamil

கணவனின் கொடூரம்: மனைவியை கொன்று, சமைத்து, எலும்புகளை உரலில் இடித்த அதிர்ச்சி சம்பவம்!

east tamil

யாழ்ப்பாண கோழி பிடித்த 3 பேர் கைது!

Pagetamil

சிறுமியுடன் இயற்கைக்கு மாறான விதத்தில் பாலியல் சேட்டை: காமக்கொடூரனுக்கு விதிக்கப்பட்ட தண்டனை!

Pagetamil

Leave a Comment