முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுட்டித்த குற்றச்சாட்டில் பயங்கரவாத தடைச்சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 10 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
பாசிக்குடா கடற்கரையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுட்டித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் 10 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இதில் 2 பெண்களும் கைதாகினர்.
7 மாதங்களாக பிணை மறுக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள், இன்று வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டனர்.
கைதானவர்கள் சார்பில் சட்டத்தரணிகள் இரட்ணவேல், க.சுகாஷ் உள்ளிட்டவர்கள் முன்னிலையாகினர்.