தற்போதைய அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கை குறித்த அறிக்கையை இரண்டு வாரங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபருக்கு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
தற்போதைய அமைச்சரவையின் நியமனம் அரசியலமைப்பின் விதிகளை மீறுவதென குறிப்பிட்டு தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுவொன்று இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
பொறியியலாளர் கபில ரேணுகாவினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு, நீதியரசர்கள் விஜித மலல்கொட, யசந்த கோதகொட மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகியோர் அடங்கிய மூவரடங்கிய குழாம் முன்னிலையில் இன்று காலை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்படி இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த மனு 2022 ஜனவரி 27ஆம் திகதி மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.




