26.3 C
Jaffna
February 2, 2025
Pagetamil
இலங்கை

எரிவாயு கசிவு வெடிப்புகளைத் தடுக்க பல புதிய திட்டங்கள்

எரிவாயு கசிவு தொடர்பான சம்பவங்களை ஆராய்ந்து தீர்வுகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட குழு, நுகர்வோருக்கு வீட்டு எரிவாயு சிலிண்டர்களை வழங்குவதற்கான புதிய முறையை பரிந்துரைத்துள்ளது.

எதிர்காலத்தில் எரிவாயு கசிவைக் கண்டறிய, எத்தில் மெர்காப்டானை உள்ளடக்கிய தனித்துவமான இரசாயன செறிவு அளவைச் சேர்க்க எரிவாயு நிறுவனங்களுக்கு பரிந்துரைத்தது.

நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை மற்றும் இலங்கை தர நிர்ணய நிறுவனம் உட்பட பல நிறுவனங்கள் இணைந்து மேற்கொள்ள வேண்டிய தர மதிப்பீட்டிற்குப் பின், வசதியாக அடையாளம் காணக்கூடிய விசேட முத்திரையுடன் கூடிய எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு வழங்கவும் பரிந்துரைக்கப்பட்டது.

சிலிண்டர்களின் வாயு கலவையில் ஏற்பட்ட மாற்றம் சமீபத்திய வெடிப்புகளுக்கு பங்களித்ததா என்பதைத் தீர்மானிக்க ஒரு அறிவியல் ஆய்வு தொடர்கிறது.

இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் டிசம்பர் 5 ஆம் திகதி வரை 458 எரிவாயு தொடர்பான சம்பவங்களின் தகவல்களை குழு பெற்றுள்ளது, அவற்றில் 244 எரிவாயு கசிவு தொடர்பானவை.

இவற்றில்-178 அடுப்புகள் வெடித்த சம்பவங்கள், 23 எரிவாயு குழாய் சேதமடைந்த சம்பவங்கள், 9 காஸ் ரெகுலேட்டர் தொடர்பான சம்பவங்கள் மற்றும் எரிவாயு சிலிண்டருக்கு சேதம் ஏற்பட்டதாக ஒரு புகார் வழங்கப்பட்டுள்ளது.

பொறுப்பான நிறுவனங்கள் மூலம் எரிவாயு அடுப்புகள் மற்றும் தொடர்புடைய பொருட்களை வாங்குமாறும்  பொதுமக்களையும் கேட்டுக்கொண்டது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தந்தையை கத்தியால் குத்தி கொன்ற மகன் கைது

east tamil

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

east tamil

கிணற்றில் விழுந்து பச்சிளம் குழந்தை பலி

east tamil

புரியாத புதிராக எனது நீதித்துறை வாழ்க்கை முடிகிறது

Pagetamil

மாவைக்கு அஞ்சலி செலுத்திய அரசியல் பிரமுகர்களின் படத் தொகுப்பு

east tamil

Leave a Comment