25.4 C
Jaffna
March 5, 2025
Pagetamil
உலகம் முக்கியச் செய்திகள்

ஆங் சாங் சூகிக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

மியான்மர் தலைவர் ஆங் சாங் சூகிக்கு கொரோனா விதிமுறையை மீறிய குற்றச்சாட்டில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 1962 முதல் 50 ஆண்டுகளுக்கும் மேலாக மியான்மரில் இராணுவ ஆட்சி நடைபெற்றது. இதை எதிர்த்து தேசிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஆங் சாங் சூகி சுதந்திர போராட்டத்தை வழிநடத்தினார். சுமார் 21 ஆண்டுகள் அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

மக்களின் போராட்டம் காரணமாக கடந்த 2015இல் அங்கு பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில் ஆங் சான் சூகியின் கட்சி அமோக வெற்றி பெற்றது. அவரின் மகன்கள் வெளிநாட்டு குடியுரிமை பெற்றிருப்பதால் அவரால் ஜனாதிபதியாக பதவியேற்க முடியவில்லை. இதைத் தொடர்ந்து சூகிக்கு நெருக்கமான டின் கியாவ் (71) ஜனாதிபதியாக பதவியேற்றார். நாட்டின் தலைமை ஆலோசகராக ஆங் சாங் சூகி பொறுப்பேற்றார்.

இந்தநிலையில் அந்நாட்டின் அதிகாரத்தை இராணுவம் மீண்டும் கையில் எடுத்தது. ஆங் சான் சூகி இராணுவத்தினால் சிறைபிடிக்கப்பட்டார்.

தேர்தல் பிரச்சாரத்திற்காக கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மீறியது, சட்டவிரோதமாக வோக்கி டோக்கிகளை இறக்குமதி செய்தது, தேசவிரோதப் பேச்சு, ஊழல் என 4 குற்றச்சாட்டுகள் அவர் மீது வைக்கப்பட்டன.

இந்த நிலையில், ஆங் சாங் சூகிக்கு எதிரான வழக்கை விசாரித்து வந்த அந்நாட்டு நீதிமன்றம், அவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. ஆங் சாங் சூகிக்கு 505 (பி) பிரிவின் கீழ் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், இயற்கை பேரிடர் சட்டத்தின் கீழ் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், முன்னாள் ஜனாதிபதி வின் மைன்ட்டுக்கும் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

‘இந்த ஆள் அமைதியை விரும்பவில்லை’: மீண்டும் ஜெலென்ஸ்கியை விமர்சித்த டிரம்ப்!

Pagetamil

ரஷ்யா மீதான தடைகளின் ஒரு பகுதியை தளர்த்தும் திட்டத்தை தயாரிக்கிறது அமெரிக்கா!

Pagetamil

3 கட்சிகளாக அல்ல; சங்கு கூட்டணியாக பேச்சு நடத்த தயார்: தமிழரசுக்கு பதில்!

Pagetamil

இன்று வழக்கம் போல எரிபொருள் விநியோகம்!

Pagetamil

டிரம்ப்- ஜெலன்ஸ்கி சந்திப்பு மோதலாகியது: வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற்றப்பட்ட உக்ரைன் தலைவர்!

Pagetamil

Leave a Comment