இரண்டாவது நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் முன்னிலையாவதற்காக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க உயர்நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டார்.
இந்த வழக்கை ஜனவரி 24ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க நீதிமன்றம் தீர்மானித்தது.
இந்த வழக்கை நீதிபதிகள் சிசிர டி ஆப்ரூ, முர்து பெர்னாண்டோ மற்றும் பிரிதி பத்மன் சூரசேன ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது.
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிரான குற்றப்பத்திரிகையை சட்டமா அதிபர், உயர் நீதிமன்றில் ஒப்படைத்திருந்தார்.
2018 நவம்பரில் பாராளுமன்றத்தை கலைத்த ஜனாதிபதியின் தீர்மானத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை விசாரிக்க நியமிக்கப்பட்ட உயர் நீதிமன்ற அமர்வு தொடர்பில் ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க கருத்து வெளியிட்டதன் மூலம் நீதித்துறையை அவமதித்ததாக குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.