ஹட்டன், மல்லியப்பு பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் வாயு கசிவு காரணமாக ஏற்பட்ட வெடிப்பு சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இன்று (29) காலை 8.30 மணியளவில் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றதாக உணவகத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
தாம் சில காலமாக உணவகத்தை நடத்தி வந்ததாகவும், இன்று காலை உணவு சமைத்துக்கொண்டிருந்த போது எரிவாயு தாங்கி மற்றும் எரிவாயு அடுப்புக்கு இடையில் இருந்த எரிவாயு குழாய் வெடித்து தீப்பிடித்துள்ளதாகவும் வர்த்தகர் தெரிவித்துள்ளார்.
தீயினால் கடை சேதமடைந்ததுடன், சமைத்துக்கொண்டிருந்த உணவு மற்றும் பானங்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக வர்த்தகர் தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1