கொரோனா தொற்றிற்குள்ளான ஜனாதிபதி கண்ணாடியறைக்குள்: புதிய பிரதமர் பதவியேற்றார்!

Date:

செக் குடியரசின் புதிய பிரதம மந்திரியாக பதவியேற்கவுள்ள புதிய கூட்டணி அரசாங்கத்தின் தலைவர் பீட்டர் ஃபியாலா நியமிக்கப்பட்டுள்ளார்.

கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட ஜனாதிபதி மிலோஸ் ஜெமான், கண்ணாடிக் கூண்டுக்குள் இருந்தபடி, புதிய பிரதமரின் பதவிப்பிரமாணத்தை செய்து வைத்தார்.

கடந்த மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஃபியாலா தலைமையிலான குடிமை ஜனநாயகக் கட்சி தலைமையிலான 5 கட்சி கூட்டணி ஆட்சியை கைப்பற்றியது.

77 வயதான ஜனாதிபதி மைலோஸ் செமனுக்கு கடந்த வாரம், கோவிட் 19 இருப்பது கண்டறியப்பட்டது. செமன் மது அருந்துபவர் மற்றும் புகைப்பிடிப்பவர் என்று அறியப்படுகிறார். அவரும் நீரிழிவு நோயாளிதான். மருத்துவ ஆலோசனையைப் பின்பற்றி, கோவிட் 19 தொற்று இருப்பது கண்டறியப்பட்டவுடன் மிலோஸ் செமன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மிலோஸ் செமன் சமீபத்தில் ஜனாதிபதி மாளிகைக்கு மருத்துவக் குழுவுடன் சக்கர நாற்காலியில் வந்து, சுகாதார விதிகளைப் பின்பற்றி, பாதுகாப்பு ஆடைகளை அணிந்து, பதவியேற்பு விழாவிற்கு வந்தார்.

ஜனாதிபதிக்கு பிரத்யேக கண்ணாடி அறை அமைக்கப்பட்டது.அதில் அவர், பீட்டர் ஃபியாலா சில மீட்டர் தூரத்தில் பதவியேற்று பிரதமராக பதவியேற்றார்.

spot_imgspot_img

More like this
Related

AWASIA இலங்கையில் நீதிபதிகளின் ஓய்வூதிய வயது திருத்தத்தை நிறுத்துமாறு வலியுறுத்தல்

  ஆசியா மற்றும் பசிபிக் பிராந்திய சட்ட அமைப்பான LAWASIA, இலங்கையின் உச்ச...

CT Simulation தாமதம்: சுமார் 1,000 புற்றுநோய் நோயாளிகளின் சிகிச்சைக்கு ஆபத்து

அரசு சுகாதாரத் துறையில் புற்றுநோய் கதிர்வீச்சு சிகிச்சை (Radiotherapy) சேவையில் கடுமையான...

சுரேஷ் சல்லே இருதயவியல் சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றம்

முன்னாள் அரச புலனாய்வு சேவை (SIS) பணிப்பாளர் சுரேஷ் சல்லே, கொழும்பு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்