கொழும்பின் பல பகுதிகள் உட்பட நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
கொத்மலை உப மின் நிலையத்திலிருந்து பியகம உப மின்நிலையத்திற்கு மின் வழங்கும் மார்க்கத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மின் தடைப்பட்டுள்ளது.
மின் விநியோகத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள், தற்போதைய சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், கடமை நேரம் தவிர்ந்த ஏனைய நேரங்களில் ஏற்படும் சிக்கல்களை உடனடியாக சரி செய்ய முடியாமல் போகலாமென ஏற்கனவே எச்சரித்திருந்தனர்.
யுகதனவி மின் உற்பத்தி நிலைய பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இநத போராட்டம் நடந்து வருகிறது.
சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தால் தடைப்பட்டுள்ள மின்சார விநியோகத்தை சீர் செய்வதில் தாமதம் ஏற்படுமா என்பது பற்றி தெளிவாகத் தெரியவில்லை.