கனடாவிலும் இரண்டு ஒமைக்ரோன் தொற்றாளர்கள்!

Date:

கனடாவிலும், புதிய ஒமைக்ரோன் பிறழ்வுடன் இருவர் அடையாளம் காணப்பட்டனர்.

ஞாயிற்றுக்கிழமை ஒன்டாரியோவில் ஒமிக்ரோன் தொற்றுடன் இருவர் அடையாளம் காணப்பட்டனர்.

சமீபத்தில் நைஜீரியாவிற்குப் பயணம் செய்தவர்களிடமே ஒமைக்ரோன் பிறழ்வு காணப்பட்டன என்று ஒன்ராறியோவின் சுகாதார அமைச்சர் கிறிஸ்டின் எலியட், மாகாணத்தின் உயர்மட்ட பொது சுகாதார அதிகாரி டொக்டர் கீரன் மூர் ஆகியோர் வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோயாளிகள் சுயமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

நமீபியா மற்றும் சிம்பாப்வே உட்பட தென்னாப்பிரிக்காவில் உள்ள ஏழு நாடுகளில் இருந்து நாட்டுக்கு வருவதை அண்மையில் கனடா தடை செய்திருந்தது. இதில், நைஜீரியா உள்ளடக்கப்பட்டிருக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

பிரபாகரன் வீட்டு காணிக்குள் கலாச்சார மண்டபம் கட்டப் போகிறோம்!

வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனின் வீட்டு காணிக்குள்...

பட்டாசு வெடித்து இளைஞன் பலி

வீரக்கெட்டிய பகுதியில், 'பிரித்' (பௌத்த பாராயண) நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருந்த வீடொன்றில்...

மூடநம்பிக்கை, சாதிய அடிப்படையிலான திருமண விளம்பரங்கள் குறித்து அரசாங்கம் அவதானம்!

சமூக ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளில் வெளியாகும் மூடநம்பிக்கை விளம்பரங்கள், சமூகத்தைத் தவறான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்