அமெரிக்காவில் பல அருங்காட்சியகத் திருட்டுகளைப் புரிந்த 78 வயதானவருக்கு ஒரு நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
1960களிலும் 1970களிலும், அருங்காட்சியகங்களில் பல பொருள்களைத் திருடியதை பிலடெல்பியாiவ சேர்ந்த தோமஸ் கவின் ஒப்புக்கொண்டார்.
2018ஆம் ஆண்டு தான் திருடிய ஓர் அரியவகைத் துப்பாக்கியை விற்க முயன்றபோது அவர் சிக்கினார்.
அப்போதுதான் கேவின் தான் புரிந்த மற்ற திருட்டுகளையும் ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.
பழைய பொருள்களைச் சேகரிப்பது பிடிக்குமென்பதால், அவற்றை திருடியதாக தெரிவித்துள்ளார்.
தான் திருடிய அரும்பொருளான பழைய துப்பாக்கியொன்றை 1,75,000 டொலருக்கு ஒருவருக்கு விற்க முயன்ற போது சிக்கினார். அவர் பல அரும்பொருட்களை திருடியிருந்தாலும், துப்பாக்கி திருட்டு தொடர்பாகவே வழக்கு பதிவானது. அவர் திருடிய பல அரும்பொருட்களை காணவில்லையெனற பதிவுகூட, அரும்பொருட் காட்சியங்களில் இருக்கவில்லை.
அவர் புரிந்த திருட்டுகளில் பலவற்றுக்குத் தண்டனை அளிக்கும் காலவரையறை முடிந்துவிட்டததாக நீதிபதி மார்க் ஏ. கேர்னி குறிப்பிட்டார்.
ஏனைய திருட்டு பொருட்களின் மதிப்பு 5,000 டொலரை கடக்கவில்லை.
அவருக்கு ஒருநாள் சிறைத்தண்டனையும், ஓராண்டு வீட்டில் இருப்பது உட்பட 3 ஆண்டுகள் கண்காணிப்புடன் கூடிய விடுதலையும் 25,000 டொலர் அபராதமும் கேவினுக்கு விதிக்கப்பட்டது.
அவர் திருடிய பொருள்களுக்குச் சுமார் 23,000 டொலரையும் திருப்பிக் கொடுக்க வேண்டும்இ