கிளிநொச்சி நீதிமன்றத்தில் மாவீரர்நாள் தடைக்கு எதிரான மனு இன்று விசாரணை!

Date:

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள 8 பொலிஸ் நிலையங்களால் பெறப்பட்ட மாவீரர்நாள் தடைக்கு எதிரான நீதிமன்ற கட்டளையை நீக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று (26) காலை இடம்பெறவுள்ளது.

இந்த வழக்கில் முன்னிலையாகி பதிலளிக்குமாறு 8 பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளிற்கு மன்று கட்டளையிட்டுள்ளது.

கிளிநொச்சி, தர்மபுரம், பளை, பூநகரி, ஜெயபுரம், முழங்காவில், அக்கராயன் உள்ளிட்ட 8 பொலிஸ் நிலையங்களினால், 51 பேருக்கு எதிராக, மாவீரர்நாள் அனுட்டிப்பு தடைகோரி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

கடந்த 19ஆம் திகதி கிளிநொச்சி நீதிமன்ற நீதிபதி லெனின்குமார், 51 பேருக்கும் தடையுத்தரவு பிறப்பித்தார்.

தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சி.சிறிதரன், செ.கஜேந்திரன், முன்னாள் எம்.பி எம்.கே.சிவாஜிலிங்கம், முன்னாள் வடமாகாணசபை அமைச்சர் குருகுலராஜா, கரைச்சி தவிசாளர் வேழமாலிகிதன் உள்ளிட்டவர்களிற்கே தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த தடையுத்தரவிற்கு எதிராக நேற்று (25) மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் விசாரணை இன்று இடம்பெறும்.

மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா தலைமையில் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் குழு சமர்ப்பணங்களை வழங்கும்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

தமிழக முதல்வராக பதவியேற்றார் ஜோசப் விஜய்!

தமிழக முதல்வராக பதவியேற்றார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய். சென்னை...

சமூகலைத்தள மூளைச்சலவை: விஜய் வெற்றிக்கு பின்னாலிருந்த ரூட் நிறுவனம்!

திரையுலகில் நடிகராக உச்சம் தொட்ட விஜய், இன்று தமிழக அரசியலில் தனது...

தவெக முதற்கட்ட அமைச்சரவை பட்டியல் வெளியீடு

தமிழக வெற்றிக் கழக அரசின் தவெக முதற்கட்ட அமைச்சர் பட்டியலை ஆளுநர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்