27.6 C
Jaffna
February 6, 2025
Pagetamil
இலங்கை

மாவீரர்தின அஞ்சலிக்கு இடம் வழங்க மறுத்தார் வல்வெட்டித்துறை நகரசபை தலைவர்!

தீருவில் பொதுப் பூங்காவில் மாவீரர் தின நிகழ்வு நடாத்துவதற்கு வல்வெட்டித்துறை நகரசபையால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தீருவில் பொதுப் பூங்காவில் நிகழ்வை நடத்துவதற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் எம்.கே.சிவாஜிலிங்கத்தினால் அனுமதி கோரப்பட்டது.

27ஆம் திகதி காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை மாவீரர்தின நிகழ்வை நடத்த அனுமதி கோரி, இன்று (23) வல்வெட்டித்துறை நகரசபையில் கடிதம் வழங்கினார்.

வல்வெட்டித்துறை நகரசபை அனுமதி வழங்கியதும், நிகழ்விற்கான அனுமதியை பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரியிடம் பெறுவதாகவும் எம்.கே.சிவாஜிலிங்கம் குறிப்பிட்டிருந்தார்.

இந்த கடிதம் வழங்கப்பட்ட சிறிது நேரத்திலேயே, நேற்றைய திகதி (22) இடப்பட்ட பதில் கடிதம், நகரசபை தலைவரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதில், வல்வெட்டித்துறை பொலீஸ் உத்தியோகத்தர்களின் அறிவுறுத்தலின்படி, நிகழ்விற்கு அனுமதி வழங்க முடியாதென குறிப்பிட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

டயனாவின் பிடியாணை ரத்து

east tamil

மகிந்தவின் உரிமை மீறல் மனு விரைவில் விசாரணைக்கு

east tamil

பிரதேச சபைகளுக்கு நிவாரணம்

east tamil

கொஸ்கொட துப்பாக்கி சூட்டின் பிரதான சூத்திரதாரி கைது

east tamil

நீர்க்கட்டணம் குறைப்பு

east tamil

Leave a Comment