பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்துவரும் நடிகை பிரியங்கா சோப்ரா தனது சோஷியல் மீடியா கணக்குகளில் இருந்து கணவர் நிக் ஜோனாஸ் பெயரை திடீரென நிக்கியிருக்கிறார். இதனால் நடிகை பிரியங்கா சோப்ரா கணவரை பிரியப்போகிறாரா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர்.
தளபதி விஜய் நடிப்பில் வெளியான “தமிழன்“ திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை பிரியங்கா சோப்ரா. முன்னாள் உலக அழகியான இவர் பாலிவுட் சினிமாவில் கவனம் செலுத்தி முன்னணி நடிகையானார். தற்போது ஹாலிவுட் சினிமா மற்றும் டிவி தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து அசத்தி வருகிறார். மேலும் தற்போது ஹாலிவுட் பிரம்மாண்ட திரைப்படமான MATRIX 4 படத்தில் இணைந்து நடித்துவருவதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தன்னைவிட 10 வயது சிறியவரான பாப் பாடகர் நிக் ஜோனாஸை காதலித்து நடிகை பிரியங்கா சோப்ரா கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஜோத்பூரில் உள்ள உமைத்பவன் அரண்மனையில் மிகப் பிரம்மாண்டமாக கிறிஸ்துவ மற்றும் இந்து முறைப்படி இவர்களது திருமணம் நடைபெற்றது. மேலும் உலக அளவில் நட்சத்திர ஜோடிகளாக வலம்வந்த இவர்கள் சமீபத்தில் ஆஸ்கர் விருது நிகழ்ச்சியை ஒன்றாக தொகுத்து வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் தீபவாளி பண்டிகையையொட்டி புதிய வீடு வாங்கிய இந்த ஜோடி ஒன்றாக தீபாவளியைக் கொண்டாடிய நிகழ்வுகளும் ரசிகர்கள் மத்தியில் பிரமிப்பை ஏற்படுத்தியது. இப்படியிருக்கும்போது நடிகை பிரியங்கா தனது சோஷியல் மீடியா கணக்கிற்கு “பிரியங்கா சோப்ரா ஜோனாஸ்“ என வைத்திருந்த பெயரில் இருந்து ஜோனாஸ் என்பதை மட்டும் நீக்கியிருக்கிறார். இதனால் ரசிகர்கள் மத்தியில் கடும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.
மேலும் நடிகை பிரியங்கா ஜோனாஸ் என்ற பெயரை நீக்கியிருப்பதால் அவரை பிரியப்போகிறரா? என்ற சந்தேகமும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஆனால் நடிகை பிரியங்காவிற்கு நெருங்கிய நண்பர்கள் இந்தத் தகவலை மறுத்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.