ஜெய் பீம் படத்தின் உண்மையான கதைக்களம் அமைய பெற்றுள்ள முதனை கிராம மக்கள் நடிகர் சூர்யாவுக்கு முக்கிய கோரிக்கை வைத்துள்ளனர். அந்த கோரிக்கையை சூர்யா ஏற்காவிட்டால் அவருக்கு எதிராக தொடர்ந்து போராட போவதாக எச்சரித்துள்ளனர்.
ஜெய்பீம் என்கின்ற திரைப்படம், விருத்தாசலம் அடுத்த முதனை கிராமத்தில் நடந்த உண்மை சம்பவத்தை வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சூர்யா சாதிய வன்முறையை தூண்டும் வகையில் படத்தில் காட்சிகளை அமைத்து உள்ளதாக, கிராம மக்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஜெய் பீம் வன்முறையை தூண்டும் வகையில் இருப்பதால் உடனடியாக நடிகர் சூர்யா மற்றும் ஜெய்பீம் திரைப்படம் இயக்குனர் ஞானவேல் மற்றும் தயாரிப்பாளர் ஆகியோர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று முதனை கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி கிராமத்தில் உள்ள 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முதனை கிராமத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது நடிகர் சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் என தெரிவித்துள்ளனர்.