Pagetamil
முக்கியச் செய்திகள்

யாழில் மாவீரர்நாளிற்கு தடைகோரிய வழக்குகள் இன்று விசாரணை: தமிழ் தேசிய கட்சிகளின் எம்.பிக்களிற்கும் அழைப்பாணை!

மாவீரர்நாள் அனுட்டிக்க பொலிசாரால் தடைகோரப்பட்ட பல்வேறு வழக்குகள் இன்று யாழ் மாவட்ட நீதிமன்றங்களில் இடம்பெறவுள்ளன. நீதிமன்றங்களில் முன்னிலையாகுமாறு, தமிழ் தேசிய கட்சிகளின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் அழைக்கப்பட்டுள்ளனர்.

சாவகச்சேரி பொலிசாரால், சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய்பட்ட வழக்கில், மாவீரர்நாள் அனுட்டிக்க 13 பேருக்கு தடை கோரப்பட்டுள்ளது.

இதில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாவை சேனாதிராசா, த.சித்தார்த்தன், த.சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன், ஈ.சரவணபவன், தமிழ் மக்கள் கூட்டணியின் க.வி.விக்னேஸ்வரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் பிரதிநிதிகள், சாவகச்சேரி நகரசபை முன்னாள் உறுப்பினர் கிஷோர் உள்ளிட்டவர்கள், இன்று (22) காலை 9 மணிக்கு முன்னிலையாகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று வரவு செலவு திட்ட விவாதம் நாடாளுமன்றத்தில் இடம்பெறுவதால், அனேகமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சார்பில், சட்டத்தரணிகள் முன்னிலையாகுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, சுன்னாகம், காங்கேசன்துறை, தெல்லிப்பழை பொலிசாரால் மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கும் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.

இதில், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் உள்ளிட்ட சிலர் மன்றிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறை, நெல்லியடி, வல்வெட்டித்துறை பொலிசாரால் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தமிழ் கட்சிகளிற்கிடையிலான சந்திப்பு 27ஆம் திகதிக்கு தள்ளிவைப்பு!

Pagetamil

தரம் 5 புலமைப்பரிசில் முடிவுகளும், வெட்டுப்புள்ளியும் வெளியீடு!

Pagetamil

அட்டகாசத்தில் ஈடுபட்ட அர்ச்சுனாவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

Pagetamil

3 மணித்தியால இழுபறியின் பின் இஸ்ரேல்- ஹமாஸ் போர் நிறுத்தம் அமுலாகியது!

Pagetamil

அனுரவின் சீனப்பயணம்: 10 பில்லியன் டொலர் மதிப்பு முதலீடுகள் இலங்கைக்கு கிடைக்கும் வாய்ப்பு!

Pagetamil

Leave a Comment