கிளிநொச்சியில் மீண்டும் கதிகலங்க வைக்கும் விபத்து!

Date:

கிளிநொச்சி டிப்போ சந்தியில் இன்று பகல் இடத்பெற்ற விபத்து சம்பவத்தில் இருவர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று பகல் 12 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. பரந்தன் திசையிலிருந்து கிளிநொச்சி நகருக்குள் நுழைந்த கன்டர் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து நிலையத்தில் தரித்திருந்த முச்சக்கரவண்டி மற்றும் காருடன் மோதியுள்ளது.

விபத்தில் சிக்குண்ட இருவர் காயமடைந்த நிலயைில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளனர்.

கன்டர் வாகனம் பகுதியளவில் சேதமடைந்ததுடன், முச்சக்கரவண்டி மற்றும் கார் ஆகியனவும் சேதமடைந்துள்ளன.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை கடந்த 15ம் திகதி விபத்த இடம்பெற்ற பகுதியை அண்மித்துள்ள கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலயம் முன்பாக பாதசாரி கடவையில் இவ்வாறானதொரு விபத்தின்போது பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்திருந்ததுடன், மற்றுமொரு மாணவி படுகாயமடைந்திருந்தார்.

அதிகரித்த வேகம், நெரிசல் காரணமாக இவ்வாறான விபத்துக்கள் கிளிநொச்சியில் பதிவாகி வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

spot_imgspot_img

More like this
Related

நெதன்யாகுவின் எதிர்ப்பாளர்கள் அணியிடம் இஸ்ரேல் சபாநாயகர் பதவி

இஸ்ரேலிய நாடாளுமன்றம் செவ்வாய்க்கிழமையன்று புதிய சபாநாயகரைத் தேர்ந்தெடுத்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த நபர்...

சஷி வீரவன்சவின் மேன்முறையீடு நிராகரிப்பு

சட்டவிரோதமான முறையில் இராஜதந்திர கடவுச்சீட்டைப் பெற்ற குற்றத்திற்காக, முன்னாள் அமைச்சர் விமல்...

இராஜங்கன சத்தாரதன கைது

பிக்கு நிலையிலிருந்து விலக்கப்பட்டுள்ள இராஜங்கன சத்தாரதன உள்ளிட்ட இருவர் அனுராதபுரம் பொலிஸாரால்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்