சித்திரம் ரிவி தொலைக்காட்சி விநியோகஸ்தர்களிற்கு அமெரிக்க நீதிமன்றம் தண்டம்!

Date:

தொலைக்காட்சி அலைவரிசை விநியோக நிறுவனமான சித்திரம் ரிவிக்கு, அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள ஃபெடரல் நீதிமன்றம் தண்டம் விதித்துள்ளது.

தொலைக்காட்சி அலைவரிசைகளை இணையவழி விநியோகிக்கும் சித்திரம் ரிவி நிறுவனம், காப்புரிமை சட்டங்களை மீறிய குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டு, 31 மில்லியன் டொலர்கள் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.

தெற்காசியாவின் பிரபலமான தொலைக்காட்சி அலைவரிசைகள் உள்ளிட்ட 207 அலைவரிசைகள், சித்திரம் IPTV சேவை மூலம் விநியோகிக்கப்பட்டு வந்தது. பதிப்புரிமை பெற்ற தொலைக்காட்சி அலைவரிசைகளை சித்திரம் ரிவி விநியோகஸ்தர்கள் வேண்டுமென்றே மீறியதாக கண்டறியப்பட்டதை தொடர்ந்து, இந்த தீர்ப்பு வழங்கப்பட்டதாக  திருட்டுக்கு எதிரான சர்வதேச ஒலிபரப்புக் கூட்டமைப்பு (IBCAP) அறிவித்துள்ளது.

பதிப்புரிமை பெற்ற ஒரு அலைவரிசைகளை சட்டவிரோதமாக ஒளிபரப்பிய குற்றச்சாட்டில்,  31,050,000 அமெரிக்க டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மறுவிற்பனையாளர்களும் சித்திரம் ரிவி சேவை தொடர்பான செட்-டப் பொக்ஸ்களை விநியோகிக்கவோ, விற்கவோ அல்லது விளம்பரப்படுத்தவோ தடை விதிக்கிறது.

சித்திரம் ரிவிக்கு எதிரான வழக்கு, IBCAP ஆல் ஒருங்கிணைக்கப்பட்டு, அதன் உறுப்பினர் நிறுவனமான DISH Network ஆல் மார்ச் 2021 இல் தாக்கல் செய்யப்பட்டது.

ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளில் உள்ள புலம்பெயர் தமிழர்கள், சித்திரம் ரிவி செட்-டப் பொக்ஸ்களை பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

விரிவான செய்திக்கு

spot_imgspot_img

More like this
Related

மெக்கா மீதான ஹூதிகளின் ட்ரோன் தாக்குதல் முயற்சிக்கு பரவலான எதிர்ப்பு

மெக்காவை குறிவைத்து ஹூதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ட்ரோன் தாக்குதல் முயற்சியை சவூதி...

காட்டு யானைகளின் அச்சுறுத்தல் – வனஜீவிகள் அலுவலகம் அமைக்கவும் திட்டம்

சம்மாந்துறை அலவக்கரை மற்றும் அதனை அண்டிய கிராமப் பகுதிகளில் பகல் வேளைகளில்...

சாய்ந்தமருதில் தீக்காயங்களுக்கு உள்ளாகிப் பெண் பலி: சடலம் நல்லடக்கத்திற்காக உறவினர்களிடம் கையளிப்பு

அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் தீக்காயங்களுக்கு உள்ளாகிச் சிகிச்சை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்