சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுவில் பகுதியிலுள்ள வீடொன்றிற்கு சென்ற மர்மநபர்கள், வீட்டின் மீது தாக்குதல் நடத்தி சேதம் விளைவித்துள்ளனர். வீட்டின் முன் பகுதியில் பெற்றோல் ஊற்றி தீமூட்டியுள்ளனர்.
உடுவில் கிழக்கு, அம்பலவாணர் வீதியிலுள்ள வீடொன்றின் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
வீட்டில் 70 வயதான முதியவர் ஒருவர் தனித்திருக்கிறார்.
நேற்று மதியம் 1 மணியளவில் 2 மோட்டார் சைக்கிள்களில் 6 ரௌடிகள் வந்துள்ளனர். அவர்கள் முகங்களை கருப்பு துணியால் முடி, அடையாளங்களை மறைத்துள்ளனர்.
வீட்டின் முன் பெற்றோல் ஊற்றி கொழுத்தி விட்டு, வீட்டிலுள்ள கண்ணாடிகளை அடித்து உடைத்தனர். பின்னர் தொலைக்காட்சி பெட்டிஉள்ளிட்ட பெறுமதியான பொருட்களை அடித்து உடைத்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
முதியவருக்கும், உறவினர் ஒருவருக்கும் வீடு தொடர்பான சர்ச்சை நீடிக்கிறது. முதியவரும், உறவினரும் இணைந்தே வீடு கட்டியுள்ளனர். அந்த உறவினர் இப்பொழுது வெளிநாட்டில் வசிக்கிறார்.
அந்த வீட்டை உறவினர் தமக்கு வழங்குமாறு சர்ச்சையை ஏற்படுத்தி வருவதாகவும், அவரது பின்னணியில் இந்த சம்பவம் நடந்திருக்கலாடமென முதியவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.




