வயதானவர்கள் மற்றும் நோயெதிர்ப்பு குறைபாடுள்ள நபர்களுடன் ஒப்பிடுகையில் குறைந்த சதவீத குழந்தைகள் மட்டுமே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சின் பேச்சாளர் டொக்டர் ஹேமந்த ஹேரத், தற்போதைய தரவுகளின்படி குழந்தைகள் கொவிட்-19 தொற்று மற்றும் சிக்கல்களால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு.
எனவே குழந்தைகளுக்கு தடுப்பூசி போட தேவையில்லையென முடிவு செய்துள்ளதாக குறிப்பிட்டார்.
குழந்தைகள் கடுமையான சிக்கல்களை எதிர்கொள்கின்றனர் என்பதற்கான போதுமான தரவுகள் இல்லாததால், குழந்தைகளுக்கு தடுப்பூசிகளை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
குழந்தைகளுக்கு தடுப்பூசி போட வேண்டியதன் அவசியத்தை ஆராய்ச்சி முடிவுகள் மற்றும் தரவுகள் சுட்டிக்காட்டும் பட்சத்தில், தடுப்பூசிகளை அவர்களுக்கு வழங்க தயங்க மாட்டார்கள் என்று டொக்டர் ஹேமந்த ஹேரத் கூறினார்.