29.8 C
Jaffna
March 29, 2024
இலங்கை

இளம் தொழில் முயற்சியாளர்களை அதிகரிக்க திட்டம்!

சிறப்புத் திட்டத்தின் மூலம் மக்காச்சோளத்தில் தன்னிறைவு அடைவதை அரசு இலக்காகக் கொண்டிருப்பதாக சிறு பயிர்கள் தோட்டம் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டுக்கான இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து தெரிவித்த மேலதிக செயலாளர் திலகா ஜயசுந்தர, சிறு பயிர் கைத்தொழிலை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் ஐந்தாண்டு திட்டத்தை வகுத்துள்ளதாக தெரிவித்தார்.

மசாலா பொருட்கள் மற்றும் சிறு பயிர் தொழில் மூலம் ஏற்றுமதி வருவாயை இரட்டிப்பாக்க எதிர்பார்க்கிறோம் என்றார்.

தொழில் துறையானது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 வீதத்தை மாத்திரமே வழங்குகின்றது. அதேவேளையில் அதனை 4 வீதமாக இரட்டிப்பாக்க எதிர்பார்த்துள்ளனர்.

அனைத்து இலங்கையர்களின் தனிநபர் வருமானத்தை அதிகரிப்பதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு இணங்க, தொழில்துறையில் அங்கம் வகிக்கும் தனிநபர்களின் தனிநபர் வருமானத்தை 6,500 அமெரிக்க டொலர்களாக அதிகரிப்பதிலும் கவனம் செலுத்துவதாக அவர் கூறினார்.

சிறு பயிர்த் தோட்டங்களில் 10 வீதமான இளம் தொழில்முயற்சியாளர்கள் மட்டுமே ஈடுபட்டுள்ளதாகவும் அதனை 30 வீதமாக அதிகரிக்க விரும்புவதாகவும் மேலதிக செயலாளர் திலகா ஜயசுந்தர தெரிவித்தார்.

அவர்கள் வகுத்துள்ள ஐந்தாண்டுத் திட்டத்தின் மூலம், சீனி, முந்திரி மற்றும் பல பொருட்களின் இறக்குமதிச் செலவை 60 சதவீதம் குறைக்க விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வட்டுக்கோட்டை இளைஞன் கொலை: கைதான ரௌடிகளின் தொலைபேசி உரையாடல் அறிக்கையை பெற அனுமதி!

Pagetamil

யாழ் போதனா மருத்துவ கழிவு பிரச்சினைக்கு தீர்வு: கோம்பயன் மயானத்தில் எரியூட்டி திறப்பு!

Pagetamil

கிளிநொச்சி ஆயுர் வேத வைத்தியசாலைகளில் மருந்துக்களுக்கு தட்டுப்பாடு

Pagetamil

பெரமுனவுக்கும் அதிகரிக்கும் பிளவு!

Pagetamil

ரூ.500 இலஞ்சம் வாங்கிய பொலிஸ்காரருக்கு சிறைத்தண்டனை!

Pagetamil

Leave a Comment