வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர் நோய் அறிகுறிகளுடன் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்துள்ளார்.
மட்டுவிலை சேர்ந்த 38 வயதான குடும்பஸ்தர் ஒருவரே உயிரிழந்தார்.
அவரது வீட்டில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், டன் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் மூச்சு சிரமம் ஏற்பட்டதையடுத்து, அவசர நோயாளர் காவு வண்டிக்கு அறிவித்தல் வழங்கப்பட்டது. நோயாளர் காவு வண்டி சென்று, அவரை வீட்டிலிருந்த அழைத்து வந்தது.
எனினும், அவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு வருவதற்கு முன்பாகவே, நோயாளர் காவு வண்டிக்குள் உயிரிழந்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1