26.1 C
Jaffna
December 18, 2024
Pagetamil
இலங்கை

ஜே.வி.பி கார்த்திகை வீரர்களை நினைவுகூர முடியுமெனில், நாம் ஏன் மாவீரர்களை நினைவுகூர முடியாது?; கேள்வி எழுப்புகின்றார் ரவிகரன்!

ஜே.வி.பி கார்த்திகை வீரர்களை நினைவுகூர முடியுமெனில், நாம் ஏன் மாவீரர்களை நினைவுகூரமுடியாது என முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் எழுப்பியுள்ளார்

மாவீரர்நாள் நினைவேந்தல் தொடர்பாக முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இன்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் கருத்து தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு பொலீசாரினால் முல்லைத்தீவு நீதிமன்றால் வழங்கப்பட்ட தடைஉத்தரவு எனக்கு வழங்கப்பட்டுள்ளது நாங்கள் நீதிமன்றத்தின் தீர்ப்புக்களை மதிக்கின்றோம் .

பொலீசார் இந்த விடையத்தில் ஒரு பாரபட்சமாக நடக்கின்றார்கள். மாவீரர் நாள் நிகழ்வினை தமிழ்மக்கள் அனுஸ்டிக்கக்கூடாது என்ற நிலையில் பல நீதிமன்றங்கள் ஊடாக தடை உத்தரவினை பெற்று எல்லோருக்கும் வழங்கிவருகின்றார்கள்.

கடந்த 13 ஆம் திகதி மக்கள் விடுதலை முன்னணி கட்சியினர் யாழ்ப்பாணத்தில் கார்த்திகை வீரர்கள் தினம் என்று நினைவுகூர்ந்துள்ளார்கள். இதற்கு நாங்கள் எதிர்ப்பல்ல கார்த்திகை வீரர்கள் நினைவுதினம் என யாழில் வந்து நினைவுகூர முடியுமானால் எங்கள் மக்கள் ஏன் தங்கள் உறவுகளை எண்ணி மாவீரர்களை நினைவுகூரமுடியாது என்பதுதான் என்னுடைய கேள்வி.

பொலீசார் தமிழ்மக்கள் தங்கள் உறவுனை நினைவுகூருவதற்கு எதிராக நீதிமன்றத்தினை நாடி சென்றவர்கள் ஏன் சிங்கள வர்களை நினைவுகூருவதற்காக ஜே.வி.பி யினர் செய்த நடவடிக்கை அல்லது செய்யப்போகின்ற நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றம் ஊடாக எடுக்கவில்லை என்பது எங்கள் கேள்வி பொலீசார் இந்த விடையத்தில் தமிழர்களுக்கு ஒரு நீதியாகவும் சிங்கள இனத்தவர்களுக்கு ஒரு நீதியாகவும் நடக்கின்றார்களா என்பது எங்களின் கேள்வியாக இருக்கின்றது இப்படியா பாராபட்சமான நடவடிக்கையினை செய்யவேண்டாம் என வலியுறுத்துகின்றேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பேரவலத்தின் சாட்சியாக நினைவிடம் அமைக்கப்பட வேண்டும் – ரவிகரன் MP

east tamil

நாமலின் கல்வி தகைமை குறித்து முறைப்பாடு

east tamil

“என் கல்வி தகைமைகளை நாளை சமர்ப்பிப்பேன்” – எதிர்க்கட்சித் தலைவர்

east tamil

யாழ் மாவட்ட காற்றின் தரத்தை 1 மாதம் தொடர்ந்து பரிசோதிக்க உத்தரவு!

Pagetamil

ரணில் அனுரவுக்கு பாராட்டு

east tamil

Leave a Comment