Pagetamil
சினிமா

நயன்தாராவின் ‘கனெக்ட்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடிக்கும் படத்துக்கு ‘கனெக்ட்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

படங்கள் இயக்குவது மட்டுமன்றி, நயன்தாராவுடன் இணைந்து படத் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார் விக்னேஷ் சிவன். சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியான ‘நெற்றிக்கண்’ இவருடைய ரெளடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்ததுதான். அதனைத் தொடர்ந்து ‘கூழாங்கல்’, ‘ராக்கி’ உள்ளிட்ட படங்களின் வெளியீட்டு உரிமையையும் கைப்பற்றினார்.

இந்நிலையில் தற்போது நயன்தாரா நடிப்பில் அஸ்வின் சரவணன் இயக்கும் படத்தை விக்னேஷ் சிவனின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ‘கனெக்ட்’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் சத்யராஜ், அனுபம் கேர் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மணிகண்டன் கிருஷ்ணமாச்சாரி ஒளிப்பதிவு செய்ய பிரித்வி சந்திரசேகர் இசையமைக்கிறார்.

ஹாரர் வகையில் உருவாகி வரும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் படக்குழு நயன்தாராவின் பிறந்த நாளான இன்று (18) வெளியிட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளியான ‘மாயா’ படத்தை அஸ்வின் சரவணன் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்

‘விஸ்வாசம்’ வசூல் சாதனையை முறியடித்த ‘குட் பேட் அக்லி’

Pagetamil

“அந்த நடிகை இப்படி பேசுவார் என எதிர்பார்க்கவில்லை” – சிம்ரன் விமர்சிப்பது யாரை?

Pagetamil

இலட்சக்கணக்கில் பணம் கொட்டி தென்னிந்திய நடிகைகளை அழைத்து மகிழும் புலம்பெயர் தமிழர்கள்!

Pagetamil

காதலரை கரம்பிடிக்கும் அர்ஜுனின் 2வது மகள் அஞ்சனா!

Pagetamil

“ஜோதிகா மட்டும் இல்லையென்றால்…” – சூர்யா நெகிழ்ச்சி

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!