திருமண வீட்டிற்கு சென்றவர்களின் வாகனம் விபத்து: காயமடைந்த இளைஞர் மரணம்!

Date:

வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற போது ஹயஸ் வாகனம் விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்தவர்களில் இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற இருந்த புதல்வியின் பதிவுத் திருமணத்திற்காக வவுனியா, தோணிக்கல் பகுதியில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற ஹயஸ் வாகனம் கல்கமுக பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த போது இன்று அதிகாலை (18) வீதியில் நிறுத்தப்பட்டிருந்த பாரவூர்தியுடன் மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தில் வாகன சாரதி மற்றும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 உள்ளடங்களாக 6 பேர் படுகாயமடைந்த நிலையில் மூவர் அனுராதபுரம் வைத்தியசாலையிலும், மூவர் கல்கமுக வைத்தியசாலையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் 22 வயது இளைஞன் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். ஏனையவர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து தொடர்பில் கல்கமுக பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

பிரபாகரனுக்கு வாழ்த்து சொன்னவருக்கு சபையில் இடமில்லை! ரவிகரன் எம்.பி.க்கு எதிராக நாடாளுமன்றத்தில் வெடித்த சர்ச்சை!

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியவர்களும் மாவீரர்...

பங்களாதேஷ் வீரர் முஷ்பிகுர் ரஹீம் டெஸ்டில் இருந்து ஓய்வுபெறுகிறார்!

பங்களாதேஷ் வீரர் முஷ்பிகுர் ரஹீம் 2027 பெப்ரவரியில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு...

இலங்கைக்கு தப்பிவந்த 5 தேடப்படுபவர்கள் சீனாவுக்கு நாடு கடத்தல்

சீன அரசாங்கத்தால் தேடப்பட்டு வந்த ஐந்து சீனப் பிரஜைகள், இலங்கையின் பல்வேறு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்