வல்வெட்டித்துறை நகரசபையின் வரவு செலவு திட்டம் தோல்வியடைந்தது.
அண்மையில் எம்.ஏ.சுமந்திரன் அணி, ஈ.பி.டி.பி, சுயேட்சைக்குழு இணைந்து வல்வெட்டித்துறை நகரசபையை கைப்பற்றியருந்தனர். இந்த நிலையில் இன்று நடைபெற்ற வரவு செலவு திட்டம் பெரும் எதிர்பார்ப்பை தோற்றுவித்திருந்தது.
இன்றைய வரவு செலவு திட்டத்தில் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டது.
ஆதரவாக 8 வாக்குகளும், எதிராக 9 வாக்குகளும் அளிக்கப்பட்டன. தமிழ் தேசிய கூட்டமைப்பின் 7 உறுப்பினர்களும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் 2 உறுப்பினர்களும் எதிராக வாக்களித்தனர்.
சுயேட்சைக்குழு, ஈ.பி.டி.பி, அங்கஜன் இராமநாதன் தரப்பினர் ஆதரவாக வாக்களித்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1