பல சுகாதார தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இன்று பிற்பகல் கொழும்பில் போராட்டம் நடத்தவுள்ளன.
ஏழு கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் நண்பகல் சுகாதார அமைச்சுக்கு முன்பாக நடத்தப்படவுள்ளது.
போராட்டத்தை ஒடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டால், 50,000 சுகாதார வல்லுநர்கள் சேவையில் இருந்து விலகுவார்கள் என்று தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளதாக சுகாதார வல்லுநர்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
சம்பள முரண்பாடுகளுக்கான தீர்வுகள், தாதியர் ஊழியர்கள் மற்றும் துணை மருத்துவ பட்டதாரிகளுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய சம்பளக் கட்டமைப்பு, கூடுதல் கொடுப்பனவுகளுக்கு ஒத்த கொள்கையை உருவாக்குதல் ஆகியவை தங்களது கோரிக்கைகளில் உள்ளடங்குவதாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் எதிர்வரும் 24ஆம் திகதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக சுகாதார வல்லுநர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.