எரிபொருள் விலை சூத்திரம் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் சப்ரி, இந்த கோரிக்கையை கவனத்தில் கொள்ளுமாறு நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்தார்.
இலங்கை மத்திய வங்கியும் இந்த பிரேரணையை முன்வைத்துள்ளதாக தெரிவித்த அமைச்சர், விலை சூத்திரமொன்றை மீள அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்பதை தாம் ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்தார்.
உலக எரிபொருளின் விலையை அடிப்படையாகக் கொண்டு ஏற்ற இறக்கமான எரிபொருள் விலைகளைக் கொண்டிருக்கும் முறைக்கு அரசாங்கம் திரும்ப வேண்டும் என்றும் அவர் கூறினார்.
எனவே, இந்த கோரிக்கையை நிதியமைச்சர் மற்றும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என அமைச்சர் சப்ரி வலியுறுத்தியுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1