யாழ்ப்பாணம், இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியை ஆதரவற்றவர்களை பராமரிக்கும் இல்லம் அல்லது பொது நிறுவனங்களிற்கு வழங்க வலியுறுத்தி அதன் உரிமையாளர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
தனது குடும்பத்தினரை வலியுறுத்தியே இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியின் முன்பாக இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இலங்கை வேந்தன் கலைக்கல்லூரி சார்பில் பணம் கடனாக பெறப்பட்டுள்ளதாகவும், அந்த பணத்தை திருப்பி செலுத்தி விட்டு, கலைக்கல்லூரியை பொது நிறுவனங்களிற்கு வழங்க வேண்டுமென வலியுறுத்தி இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கலைக்கல்லூரியை விற்கவோ, வழங்கவோ மனைவி கையொப்பமிட மறுக்கிறார் என போராட்டத்தில் ஈடுபட்ட உரிமையாளர் தெரிவித்தார்.
சற்று முன்னர் யாழ்ப்பாண பிரதேச செயலாளர் சம்பவ இடத்திற்கு வந்து, சமரசம் செய்து, போராட்டத்தை முடித்து வைத்துள்ளார்.