தேசிய சுதந்திர முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான வீரகுமார திஸாநாயக்க, பியசிறி விஜேநாயக்க மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ரோஜர் செனவிரத்ன ஆகியோரை கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் புத்திக ஸ்ரீ ராகலவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2016ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் செயிட் ராத் அல் ஹுசைனின் இலங்கை வருகைக்கு எதிராக தேசிய சுதந்திர முன்னணி தும்முல்லை சந்தியில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது.
போராட்டத்தை நடத்தியதன் மூலம் பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியதாக பல தேசிய சுதந்திர முன்னணியின் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1