தெற்கு அந்தமான் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, தற்போது மத்திய அந்தமான் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளதால், அது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 17ஆம் திகதிக்குள் மேற்கு-மத்திய வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நவம்பர் 18ஆம் திகதி தெற்கு ஆந்திரா கடற்கரையை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, ஆழ்கடல் பகுதிகளில் (நாட்டின் கிழக்கே) செயற்படும் கடற்படை மற்றும் மீனவ சமூகங்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் எதிர்கால வானிலை முன்னறிவிப்புகள் குறித்தும் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காங்கேசன்துறையிலிருந்து மன்னார், புத்தளம் மற்றும் கொழும்பு ஊடாக காலி வரையான கடற்பரப்புகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் சில இடங்களில் பலத்த மழை பெய்யும்.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்று தென்மேற்கு அல்லது மேற்கு திசையிலிருந்து வீசுவதுடன் காற்றானது மணிக்கு 40 தொடக்கம் 50 கிலோ மீற்றர் வேகத்தில் காணப்படும். காங்கேசன்துறையிலிருந்து மன்னார், கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 55 தொடக்கம் 60 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும்.