பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஒரு மொடல் அழகி தனது பிட்டத்தை ரூ.35 கோடிக்கு காப்பீடு செய்துள்ளார்.
பிரேசிலை சேர்ந்த மொடல் அழகி நாத்தி கிஹாரா. 35 வயதான இவர் உலகிலேயே அழகான பிட்டம் கொண்ட பெண் என சமீபத்தில் உலக பிட்ட அழகி பட்டம் பெற்றார்.
2021ம் ஆண்டிற்கான இந்த பிட்ட அழகி பட்டத்திற்கான போட்டி, இன்ஸ்டாகிராமில் நடந்த வாக்கெடுப்பின் மூலம் நடந்தது. நேத்தி கிய்ஹாராவிற்கு அதிகமான மக்கள் வாக்களித்து, உலக பிட்ட அழகியாக்கினார்கள்.
இந்த அழகி பட்டம் பெற்ற பின்பு தன் பிட்டத்தை காப்பீட்டு நிறுவனமொன்றில் காப்பீடு செய்துள்ளார். இதற்காக அவர் 1.3 மில்லியன் பவுண்ட்ஸ் அதாவது இலங்கை மதிப்பில் ரூ.35,23,48,441.64 பணம் கட்டியுள்ளார்.
“என் பிட்டத்தால் நான் பிரபலமானேன். இது பிரேசிலில் மிகப்பெரியது. எனவே, அதை காப்பீட்டில் வைப்பது நியாயமானது.” என்று வேறு தம்பட்டமும் அடித்துள்ளார்.
இவருக்கு தற்போது இருக்கும் பிட்டத்தில் அளவில் திருப்தியடையவில்லை. உடற்பயிற்சியின் மூலம், மேலும் பிட்டத்தை பெரிதாக்க முற்சிக்கிறாராம். தற்போது, 126cm அளவை கொண்டவர், உடனடியாக 130cm அளவை எட்ட வேண்டும் என்ற குறுகிய கால இலக்குடன் செயற்பட்டு வருகிறாராம்.
குழந்தை பிறந்து நான்கு மாதங்களுக்குப் பிறகு அவர், மிக இளைய உலக பிட்ட அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
உலகின் மிக அழகான பிட்டம் என்ற பட்டத்தை வென்ற முதல் அம்மா இவர்தான்.