மட்டக்களப்பு வாழைச்சேனை கமநலசேவை பிரிவிற்குட்பட்ட விவசாயிகளுக்கு நனோ நைட்ரஜன் திரவப் பசளை தொடர்பில் இந்திய பிரதிநிதிகள் விளக்கம் அளிக்கும் நிகழ்வு வாழைசேனை கமநல சேவை திணைக்களத்தில் நடைபெற்றது.
கமநலசேவை பெரும்பாக உத்தியோகஸ்த்தர் எம்.ஏ.ரசீட் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் ஜ.எவ்.எவ்.சீ.ஓ. இந்திய நிறுவணத்தின் விவசாய சேவைப்பிரிவின் தலைமை அதிகாரி மற்றும் பிரதிநிதிகள் இவ் கலந்துரையாடல் நிகழ்வில் பங்கு பற்றியிருந்தனர்.
இதன்போது விவசாயிகளுக்கு நனோ நைட்ரஜன் தொடர்பில் விளக்கமளிக்கப்ட்டது.
இதனையடுத்து வாழைச்சேனை கமநல சேவை பிரிவிற்குட்பட்ட அடம்படி வட்டவான் வயல் பிரதேசத்தில் நனோ நைட்ரஜன் திரவப் பசளை விசிறல் நடவடிக்கை முன்னெடுக்கபட்டது.
இவ் நனோ நைட்ரஜன் வயல் வெளியில் விசிறும்போது பாதுகாப்பு அங்கி பயன்படுத்த தேவையில்லை என்றும் காற்றில் வேகம் அதிகரிக்கும் போது முகக்கவசம் அணியவேண்டும் என்று விளக்கமளிக்கட்டது.
இதற்கான விலை விபரம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் தீர்மானிக்க வேண்டும் என்று கூறப்பட்டது.
இந்தியாவில் 14 விவசாய ஆராய்ச்சி பல்கலைக் கழகங்கள் 14 ஆயிரம் விவசாயிகள் மத்தியிலும் 94 வகையான பயிர் வகைகளிலும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அதிக விளைச்சலை பெற்றுக்கொண்டதாகவும் பக்கவிளைவுகளை ஏற்படுத்தாது என்றும் விளக்கமளிக்கப்பட்டது.