பிரிட்டனை சேர்ந்த மொடல் அழகி அம்பர் மே, தனது உடலில் மேற்கொண்ட பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகளிற்காக 70,000 பவுண்ஸ்களை (இலங்கை ரூபா 1,89,72,608) செலவிட்டுள்ளார்.
பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைக்கு அடிமையாக உள்ள இந்த மொடல், தனது கனவு உடலை அடைய, 8 சத்திர சிகிச்சைகள் மேற்கொண்டுள்ளார்.
23 வயதான அம்பர் மே, பிளாஸ்டிக் சத்திர சிகிச்சையின் மூலம் தனது மார்பினளவை 36NN ஆக மாற்றியுள்ளார்.
லீசெஸ்டர்ஷையரைச் சேர்ந்த அழகி, கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏற்கனவே எட்டு முறை பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை மேற்கொண்டுள்ளார்.
அம்பர் பிளாஸ்டிக் சத்திர சிகிச்சையில் தனது மார்பகங்களுக்கு 30,000 பவுண்ஸ், பிட்டத்திற்கு 20,000 பவுண்ஸ், பற்களுக்கு 4,000 பவுண்ஸ் என செலவிட்டுள்ளார்.
“நான் போலியாகத் தோற்றமளிக்க விரும்புகிறேன். நான் வித்தியாசமாகத் தோற்றமளிக்க விரும்புகிறேன், ஒவ்வொரு அறுவை சிகிச்சையும் ஒரு பொழுதுபோக்காக காத்திருக்கிறேன். எனது அனைத்து அறுவை சிகிச்சைகளுக்கும் பிறகு நான் என் உடலில் மிகவும் மகிழ்ச்சியாகவும் நம்பிக்கையுடனும் உணர்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறினார்: “நான் அறுவை சிகிச்சைகளிற்கு அடிமையாக இருக்கிறேன் என்று கூறுவேன். எனக்கு வளைந்த தோற்றம் பிடிக்கும், மேலும் எனது ரசிகர்களும் என்னை பெரிதாக பார்க்க விரும்புகிறார்கள்.
எனது மார்பகங்களும் பெரிதாக இருப்பதைப் பார்க்க எனக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர்.
இப்போது இருப்பதை விட இன்னும் மார்பளவை பெரிதாக்க திட்டமிட்டுள்ளேன்.
நான் மக்களை ஈர்க்கவோ அல்லது கவர்ந்திழுப்பதற்காகவோ இதைச் செய்யவில்லை, எனக்காகவே செய்கிறேன். நான் வித்தியாசமாக இருக்க விரும்புகிறேன், அதனால்தான் இதைச் செய்கிறேன்.”
அழகி கடந்த செப்ரெம்பரில் பிளாஸ்டிக் சிகிச்சைகளின் மூலம் மார்பகங்களை 3000CC அளவிற்கு மாற்றினார். விரைவில் அதை 4000CC ஆக்க திட்டமிட்டுள்ளார். அவரது மார்புக்கச்சையின் அளவு KK அளவிலிருந்து NN அளவு வரை சென்றுள்ளது.
இப்போது அவரது ஒவ்வொரு மார்பிலும் மூன்று லிட்டர் அளவிற்கு சேலைன் திரவம் ஏற்றப்பட்டுள்ளது.
“எனது குடும்பம் நான் செய்யும் அறுவை சிகிச்சைகளை ஒப்புக்கொள்ளவில்லை அல்லது விரும்புவதில்லை ஆனால் அவர்கள் இப்போது அதற்குப் பழகிவிட்டார்கள், அவர்கள் அதை ஏற்றுக்கொள்கிறார்கள்.
என் அம்மா என் மார்பகங்கள் கேலிக்குரியதாக இருப்பதாக நினைக்கிறார். நான் பெரிதாகப் போவதை விரும்பவில்லை, ஆனால் நான் இன்னும் ஜனவரியில் பெரிதாக்க முன்பதிவு செய்துள்ளேன்.” என்றார்.
பார்வைக்கு எல்லாம் நன்றாக இருந்தாலும், நடைமுறை வாழ்க்கையில் நிறைய சிக்கல்களை சந்திப்பதாக கூறியுள்ளார்.
முக்கியமாக, உடைகள் வாங்குவது மிகவும் கடினம், பொருத்தமான ஆடைகளை வாங்குவதற்குள் போதும் போதுமென ஆகிவிடுவதாக அழகி, அலுத்துக் கொள்கிறார்.




