16 வயது சிறுமியுடன் தலைமறைவாகி குடும்பம் நடத்திய ஒருவரை பருத்தித்துறை பொலிசார் கைது செய்துள்ளனர்.
இளவாலையை சேர்ந்த 21 வயதான இளைஞனும், 16 வயது சிறுமியுமே கைதாகினர்.
ஏற்கனவே திருமணமாகி ஒரு பிள்ளையின் தந்தையான இளைஞன், 16 வயது சிறுமியையும் காதல் வசப்படுத்தி, பருத்தித்துறையிலுள்ள வீடொன்றிற்கு அழைத்து சென்று தலைமறைவாகியுள்ளார்.
சிறுமியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டிருந்தனர்.
இதனடிப்படையில், பருத்தித்துறையில் பதுங்கியிருந்த காதலனும், சிறுமியும் கைதாகினர். அவர்கள் காங்கேசன்துறை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
பராயமடைய சிறுமியை கடத்தி சென்று, பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கியதாக இளைஞன் மீது வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
1