கடல் வழியாக கனடாவுக்கு நபர்களை கடத்த முயன்ற பிரதான கடத்தல்காரரான கண்ணன் உட்பட 8 பேர் எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சிலாபம் மாவட்ட நீதிமன்றத்தினால் நேற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 9ஆம் திகதி சிலாபம் கடற்பகுதியில் பல நாள் இழுவை படகில் இருந்து கனடா நோக்கிச் சென்ற 19 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
இந்த மனித கடத்தல் நடவடிக்கையின் மூளையாக இருந்தவர், ‘கண்ணன்’ என்று அழைக்கப்படும் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் என பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
கனடாவுக்குச் அழைத்து செல்வதாககூறி ஒவ்வொருவரிடமிருந்தும் ரூ.3 -3.5 மில்லியன் வரை பெற்றுள்ளார்.
யுத்தத்தின் பின் மலேசியாவுக்குத் தப்பிச் சென்ற பிரதான சந்தேகநபரான ‘கண்ணன்’ அண்மையில் இலங்கைக்குத் திரும்பி மனித கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.