27.5 C
Jaffna
August 7, 2022
மருத்துவம்

ஆடையில்லாமல் படுங்கள்; படுக்கையறையின் பவர்ஃபுல் டெக்னிக்!

முதல் நாள் இரவு திருப்தியான தாம்பத்திய உறவுகொண்டால், மறுநாள் காலையில் எனர்ஜியாக அலுவலக வேலைகளைப் பார்க்கலாம் என்கின்றன ஆய்வுகள்.

‘டெட்லைனை முடிச்சு டிராஃபிக்ல வண்டியை ஓட்டி, வீட்டுக்கு வந்து கொரோனா போக தேய்ச்சுக் குளிச்சிட்டு பெட்ரூமுக்குள்ள நுழைஞ்சா, என்னை எப்ப பெட்ல போடப்போறேன்னு உடம்பு கெஞ்ச ஆரம்பிச்சிடுது. எனர்ஜியே இல்லாம எப்படிங்க செக்ஸ் வைப்பது. அதெல்லாம் வீக் எண்ட்ல பார்த்துக் கொள்ளலாம்’ என்பதுதான் இன்றைக்கு இருக்கிற பெரும்பாலான தம்பதிகளின் தாம்பத்திய நிலைமை.

கம்ப்யூட்டர்லேயே குடியிருக்கிற கணவனுக்கு ‘என் தலைவியோட ஷாம்பு கூந்தல் நறுமணத்தைவிட நீ தேன் குடிச்ச பூக்கள் வாசமா இருந்துச்சா வண்டே’ன்னு ரொமான்டிக்கா பேசுறதுக்கான மனநிலை வர வேண்டும். லப்ரொப்பைப் பார்த்துப் பார்த்து கண்கள் பூத்துப்போன மனைவி, `செம்புலப்பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் கலக்கலாமா’ என கணவனிடம் கேட்கிற அளவுக்குக் காதலாகி கசிந்துருக வேண்டும்.

தினசரி வாழ்க்கையின் ஸ்ட்ரெஸ் கணவன், மனைவிக்கிடையேயான தாம்பத்திய உறவைக் கொல்லாமல் இருக்க அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று பாலியல் மருத்துவர் காமராஜ் விளக்குகிறார்.

‘முழுமையான செக்ஸ் உடம்பு வலியைக் குறைக்கும், தலைவலியைப் போக்கும். அலுவலகத்தில் ஏதோவொரு பிரச்னையெனில் ‘மூட் இல்ல’ என செக்ஸை அடுத்த நாளுக்குத் தள்ளி வைக்கிறார்கள். ஆனால், அன்றைக்கே செக்ஸ் வைத்தீர்களெனில் மன அழுத்தம் குறையுறதை நீங்களே அனுபவபூர்வமா தெரிந்துகொள்ள முடியும்.

உடலுறவின் உச்சக்கட்டம் மனிதர்களுடைய உடலிலும் மனதிலும் செய்கிற மஜிக்ஸை பற்றி தெரிந்து கொண்டீர்களெனில், மிக ஆச்சரியப்படுவீர்கள்.

உச்சக்கட்டம் அடையும் போது மூளையிலிருந்து ‘மார்பின்’ (Morphine) வலி நிவாரணியின் குணத்தையொத்த திரவம் ஒன்று சுரக்கும். உடல்வலியால் அவதிப்படுபவர்களுக்கு இந்த மார்பினைத்தான் பரிந்துரைப்போம். மனதை ரிலாக்ஸ் செய்வதற்கும் இதையேதான் தருவோம்.

உச்சக்கட்டம் வந்தால்தான் மார்பின் சுரக்குமா என்ற சந்தேகம் வரலாம். ஆண்களைப் பொறுத்தவரை 99 சதவிகிதம் பேர் உச்சக்கட்டம் அடைந்து விடுகிறார்கள். பெண்களில் சிலருக்குக் கிடைக்காமல் போகலாம். ஆனால், உறவு கொள்ளும்போது சுரக்கிற மற்ற ஹார்மோன்கள் வலி நிவாரணியாகவும் மன அழுத்தம் போக்கும் மருந்தாகவும் செயல்பட்டுவிடும். இந்த எஃபெக்ட் அடுத்த ஒரு நாள் வரை இருக்கும்.

இதற்கு கணவன் மனைவி பின்பற்ற வேண்டிய வழிகள்

படுக்கையறையைப் பொறுத்தவரை கணவன் – மனைவி இருவரைத் தவிர வேறு ஒருவர் இருந்தால், அதைக் கூட்டம் என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். குழந்தைகளையும் சேர்த்தே சொல்கிறேன். ‘மகள் முழிச்சிடுவாளோ; மகன் பார்த்திடுவானோ’ என்று பயந்து பயந்து வைத்துக்கொள்ளும் உறவில் உச்சக்கட்டம் அடைவது கடினம்.

அடுத்தது மிக மிக முக்கியமானது. இரவுகளில் தம்பதியர் ஆடையில்லாமல் படுத்தாலே அது செக்ஸில்தான் முடியும். அணிந்திருக்கும் ஆடை மேல் கை படுவதற்கும், வெதுவெதுப்பான மெத்தென்ற உடலின்மீது கை படுவதற்கும் வித்தியாசம் இருக்கிறதல்லவா? இப்படிப் படுத்தால் இரவிலிருந்து காலைக்குள் ஏதோ ஒரு நேரத்தில் உறவு நிகழ்ந்துவிடும். இது வெரி வெரி பவர்ஃபுல் டெக்னிக். இதில் சிரிப்பதற்கோ, ச்சீய் என்பதற்கோ ஒன்றுமே இல்லை. ஆராய்ச்சி செய்யப்பட்டு நிரூபிக்கப்பட்ட வழிமுறை இது.

பெரும்பாலானோர் குழந்தைகளுடன் படுப்பதால் இந்த முறையை முயற்சி செய்து பார்ப்பதே இல்லை.

அடிக்கடி உறவு வைத்துக்கொள்பவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். தடிமல், காய்ச்சல் வராது. உறவுகொள்ளும்போது மகிழ்ச்சிக்கான ஹார்மோன்கள் சுரப்பதால் தற்கொலை எண்ணம் வராது. வந்தாலும் தடுக்கப்படும். ஸ்ட்ரெஸ் குறையும். இரத்த அழுத்தம் சீராகும். இதனால் 10 வருடம் கூடுதலாக வாழலாம். அதிலும் இளமையாக வாழலாம். ஹார்ட் அட்டாக் வருவதற்கான வாய்ப்பு மூன்றில் ஒரு பங்காகக் குறையும். பெண்களுக்கு செர்விகல் கான்சர் ஆபத்து குறையும். ஆண்களுக்கு புராஸ்ட்டேட் கான்சர் ஆபத்து குறையும். ஆகவே, காமத்தை அடிக்கடி கொண்டாடுங்க. மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருங்கள் என்கிறார் வைத்தியர் காமராஜ்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

தூக்கத்துக்கு உதவும் 4-7-8 ஃபோர்முலா!

Pagetamil

பிறந்த குழந்தையையும் பாதிக்கும் தைராய்டு நோய்

Pagetamil

டாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள்: விந்து முந்துதல் பிரச்சனையை சரி செய்வது எப்படி?

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!