பொலிஸ் நிலையமொன்றின் பொறுப்பதிகாரியாகும் இரண்டாவது பெண்!

Date:

தலைமை பொலிஸ் பரிசோதகர் காஞ்சன சமரகோன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

நாளை திறக்கப்படவுள்ள கம்பஹா – நால்ல பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் வரலாற்றில் இரண்டாவது முறையாக, பொலிஸ் நிலையமொன்றின் பொறுப்பதிகாரியாக பெண் அதிகாரி நியமிக்கப்படவுள்ளார்.

1997ஆம் ஆண்டு, யக்கலமுல்ல பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக தலைமை பொலிஸ் பரிசோதகர் பத்மினி நியமிக்கப்பட்டிருந்தார். 24 வருடங்களின் பின், இன்னொரு பெண் அதிகாரி பொலிஸ் நிலையமொன்றின் பொறுப்பதிகாரியாக செயற்படவுள்ளார்.

கேகாலையை சேர்ந்த காஞ்சனா சமரகோன் 1997 ஆம் ஆண்டு இலங்கை பொலிஸில் மகளிர் உப பொலிஸ் பரிசோதகராக இணைந்து கொண்டதுடன், சிலாபம், வவுனியா, கம்பஹா, மீரிகம, நிட்டம்புவ மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவு உட்பட பல பிரிவுகளில் கடமையாற்றியுள்ளார்.

அவரது கணவரும் இலங்கை பொலிஸின் அமைச்சர் பாதுகாப்புப் பிரிவில் பணிபுரியும் தலைமைப் பரிசோதகர் ஆவார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

“நீண்டகால கூட்டணி கட்சியான திமுகவுக்கே துரோகம் இழைத்த ஒட்டுண்ணிக் கட்சி காங்கிரஸ்” – பிரதமர் மோடி

துரோகம் இழைக்க மட்டுமே காங்கிரஸ் கட்சிக்குத் தெரியும் என்றும், தனது நீண்டகால...

தமிழக முதல்வராக பதவியேற்றார் ஜோசப் விஜய்!

தமிழக முதல்வராக பதவியேற்றார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய். சென்னை...

சமூகலைத்தள மூளைச்சலவை: விஜய் வெற்றிக்கு பின்னாலிருந்த ரூட் நிறுவனம்!

திரையுலகில் நடிகராக உச்சம் தொட்ட விஜய், இன்று தமிழக அரசியலில் தனது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்