வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தினால் பொழியும் அடைமழையினால் யாழ் மாவட்டத்தில் 33,000 இற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நூறிற்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளன.
இன்று (10) மாலை 6 மணி வரையான நிலவரம் குறித்து மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்ட தகவல்படி-
10,188 குடும்பங்களை சேர்ந்த 33,823 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வேலணை பிரதேச செயலகத்தில் 6 பேரும், ஊர்காவற்துறை பிரதேச செயலகத்தில் 726 பேரும், காரைநகர் பிரதேச செயலகத்தில் 533 பேரும், யாழ் பிரதேச செயலகத்தில் 4,389 பேரும், நல்லூர் பிரதேச செயலகத்தில் 4,698 பேரும், சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் 2,751 பேரும், சங்கானை பிரதேச செயலகத்தில் 3,554 பேரும், உடுவில் பிரதேச செயலகத்தில் 506 பேரும், தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில்1,489 பேரும், கோப்பாய் பிரதேச செயலகத்தில் 3,465 பேரும், சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் 1,604 பேரும், கரவெட்டி பிரதேச செயலகத்தில் 3,982 பேரும், பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் 5,589 பேரும், மருதங்கேணி பிரதேச செயலகத்தில் 531 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரு வீடு முழுமையாக சேதமடைந்துள்ளது. 110 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
6 இடைத்தங்கல் முகாம்களில் 96 குடும்பங்களை சேர்ந்த 308 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். காரைநகர் பிரதேச செயலகத்தில் 1 இடைத்தங்கல் முகாமில் 5 பேரும், நல்லூர் பிரதேச செயலகத்தில் 1 இடைத்தங்கல் முகாமில் 5 பேரும், சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் 2 இடைத்தங்கல் முகாம்களில் 137 பேரும், சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் 1 இடைத்தங்கல் முகாமில் 27 பேரும், பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் 1 இடைத்தங்கல் முகாமில் 128 பேரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.



