30.7 C
Jaffna
March 29, 2024
இலங்கை

வசந்த கரன்னகொட மீதான குற்றப்பத்திரம் விலக்கப்பட்டதற்கு எதிரான மனு நிராகரிப்பு!

கொழும்பில் 11 தமிழ் இளைஞர் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவுக்கு எதிரான குற்றப்பத்திரங்களை சமர்ப்பிப்பதில்லையென்ற சட்டமா அதிபரின் தீர்மானத்திற்கு எதிராக பெற்றோர்களால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.

நீதியரசர்களான சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு இந்த மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளாமல் நிராகரித்துள்ளது.

ஒருவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் சட்டமா அதிபருக்கு உண்டு என்றும், அத்தகைய தீர்ப்பில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு கருதுகிறது.

கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவிற்கு எதிரான குற்றச்சாட்டை முன்வைப்பதைத் தவிர்ப்பதற்கு சட்டமா அதிபரால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை எதிர்த்து காணாமல் போன இளைஞர்களின் உறவினர்கள் நால்வரினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ரிட் மனு விசாரணை முடியும் வரை முன்னாள் கடற்படைத் தளபதிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை தொடருமாறு மனுதாரர்கள் கோரியுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கிளிநொச்சி ஆயுர் வேத வைத்தியசாலைகளில் மருந்துக்களுக்கு தட்டுப்பாடு

Pagetamil

பெரமுனவுக்கும் அதிகரிக்கும் பிளவு!

Pagetamil

ரூ.500 இலஞ்சம் வாங்கிய பொலிஸ்காரருக்கு சிறைத்தண்டனை!

Pagetamil

பேஸ்புக்கில் இயக்கமா?: வவுனியா வாலிபருக்கு விளக்கமறியல்!

Pagetamil

இந்திய மருந்துகளால் பாதிக்கப்பட்டவர்கள் விபரத்தை ஒப்படைக்க உத்தரவு!

Pagetamil

Leave a Comment