சபுகஸ்கந்த பிரதேசத்தில் பெண்ணொருவரை கொலை செய்து சூட்கேஸில் வைத்து வீசிய சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபர் வெல்லம்பிட்டியவில் உள்ள வீடொன்றில் பதுங்கியிருந்த போது கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 4ஆம் திகதி சபுகஸ்கந்த, மாபிம பிரதேசத்தில் வீதிக்கு அருகில் குப்பையில் வீசப்பட்டிருந்த சூட்கேஸில் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
உயிரிழந்தவர் 42 வயதான மொஹமட் சாஷி பாத்திமா மும்தாஜ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் திருமணமான தம்பதியரும் கடந்த 6ஆம் திகதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1