கொழும்பு -12 பகுதியைச் சேர்ந்த மூன்று சிறுமிகள் காணாமல் போய், மீண்டும் வீடு திரும்பியுள்ளனர். திங்கள்கிழமை வீட்டிலிருந்து புறப்பட்ட இவர்கள் நேற்று வீடு திரும்பினர். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களை பொலிஸார் இன்று வெளியிட்டுள்ளனர்.
நடன நட்சத்திரமாக வேண்டும் என்ற தங்கள் கனவை நனவாக்குவதற்காக மூன்று சிறுமிகளும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வத்தளையில் நடனக் குழுவில் இணைந்து கொள்ள சிறுமிகள் முயற்சித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்திக்கும் நம்பிக்கையில் பிட்டகோட்டேவில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகத்துக்குச் சென்ற அவர்கள், எதிர்க்கட்சித் தலைவர் அங்கில்லாததால் திரும்பிச் சென்றுள்ளனர்.
13- 15 வயதான மூன்று சிறுமிகளும் நேற்று இரவு வீடு திரும்புவதற்கு முன் பேருந்துகளில் பல பகுதிகளுக்குச் சென்றுள்ளனர்.
சிறுமிகளை மன மற்றும் உடல் ரீதியான மதிப்பீட்டை நடத்துவதற்காக நீதித்துறை மருத்துவ அதிகாரிக்கு போலீசார் அனுப்பியுள்ளனர்.