மாவனல்லை பிரதேச சபையின் உப தலைவர் மற்றும் மாவனல்லை பிரதேச சபையின் உறுப்பினர்கள் இருவர் மாவனல்லை பொலிஸாரால் இன்று (10) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 3ஆம் திகதி மாவனெல்லை மெமேரிகம வித்தியாலயத்தின் முன்பாக இடம்பெற்ற அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர் போராட்டத்திற்கு இடையூறு விளைவித்து அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அச்சுறுத்தல் விடுத்தவர்கள் மீது பொலிசார் உரிய நடவடிக்கையெடுக்கவில்லை என குறிப்பிட்டு, நேற்று (9) மாவனெல்லை பிரதேச பாடசாலை செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டு ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, இன்று பிரதித் தலைவர் உள்ளிட்ட குழுவினரை கைது செய்ததுடன், அவர்களை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1