மழையை பார்த்து வாருங்கள்: யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர்!

Date:

கனமழையின் தாக்கத்தினால் யாழ் போதனா வைத்தியசாலைக்கு சாதாரண சிகிச்சை பெற வருவோர் சற்று தாமதமாக வருமாறு யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர்த. சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார்.

யாழ்ப்பாண குடாநாட்டில் பெய்துவரும் கனமழை மற்றும் தாதியர்கள், துணை மருத்துவ சேவை உத்தியோகத்தர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தின் காரணமாக யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலையின் கிளினிக் பிரிவு மற்றும் சாதாரண பிரிவுகளில் செயற்பாடு மந்த கதியில் இடம்பெற்று வருவதாகவும், எனவே பொதுமக்கள் தற்போதுள்ள மழை குறைவடைந்த பின்னர் யாழ் போதனா வைத்தியசாலைக்கு வந்து சிகிச்சையினை பெற்றுக் கொள்ள முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

அத்தோடு சாதாரண சிகிச்சை பெறுவோர் தற்போதைய நிலையில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு வருகை தந்து அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்காது கிளினிக் பகுதி மற்றும் இது இருதய சிகிச்சை கிளினிக் பகுதிகளில் வெள்ளநீர் தேங்கி நிற்பதன் காரணமாக தற்போது சிகிச்சைகள் இடம் பெறாத நிலை காணப்படுகின்றது எனவே பொதுமக்கள் சாதாரண சிகிச்சை பெற வருவோர் மழை முடிந்த பின்னர் வருகை தந்து சிகிச்சையினை பெற்றுக் கொள்ளுமாறும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

எனினும் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவு மற்றும் ஏனைய விசேட வைத்திய சேவைகள் அனைத்தும் இடம்பெறுவதாகவும் எனினும் சாதாரண சிகிச்சைகள் மாத்திரம் தற்போது மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

தமிழ் மக்களின் உரிமையை பாதுகாக்க இந்தியா முன்வர வேண்டும்– தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ்

இந்தியாவின் நலனுக்காக வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் தொடர்ந்து பின் நிற்கும்...

மட்டக்களப்பில் ஏட்டிக்குப்போட்டியாக திலீபன் நினைவு நிகழ்வு

தியாகதீபம் திலீபன் அவர்களின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல் மட்டக்களப்பு காந்தி பூங்காவில்...

மயக்க மருந்து கொடுத்து சிறுமியை சீரழித்த பேருந்து நடத்துனர்!

தனியார் பேருந்து நடத்துநர் ஒருவர், டியூஷன் வகுப்பிற்குச் சென்று கொண்டிருந்த 15...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்