பரந்தனில் நடந்த பயங்கரம்: சம்பவ இடத்திலேயே இருவர் பலி!

Date:

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்து சம்பவம் நேற்று இரவு 11.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

பரந்தன் ஏ9 வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பார ஊர்தி ஒன்றில் மோட்டார் சைக்கிள் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றள்ளது. சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரே உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

குறி்த்த விபத்த சம்பவத்தில் குமரபுரம் பகுதியை சேர்ந்த 29 வயதுடைய மகேந்திரராசா யூட்கபிசன் மற்றும் பரந்தன் பகுதியை சேர்ந்த 34 வயதுடைய சவுந்தானந்தன் காந்தீபன் ஆகியோரே உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

சம்ப இடத்தில் பியர் போத்தல்களும் காணப்பட்டுள்ளன. குறித்த இருவரில் ஒருவர் இன்றைய தினம் தனது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் நேற்றைய தினம் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர்களின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான பூர்வாங்க விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்த வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

தமிழ் மக்களின் உரிமையை பாதுகாக்க இந்தியா முன்வர வேண்டும்– தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ்

இந்தியாவின் நலனுக்காக வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் தொடர்ந்து பின் நிற்கும்...

மட்டக்களப்பில் ஏட்டிக்குப்போட்டியாக திலீபன் நினைவு நிகழ்வு

தியாகதீபம் திலீபன் அவர்களின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல் மட்டக்களப்பு காந்தி பூங்காவில்...

மயக்க மருந்து கொடுத்து சிறுமியை சீரழித்த பேருந்து நடத்துனர்!

தனியார் பேருந்து நடத்துநர் ஒருவர், டியூஷன் வகுப்பிற்குச் சென்று கொண்டிருந்த 15...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்