யாழில் காணி அளவிடும் முயற்சி தடுத்து நிறுத்தம்!

Date:

யாழ்ப்பாணம் – வேலணை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மூன்று இடங்களில் இன்று இடம்பெறவிருந்த காணி அளவிடும் நடவடிக்கை தற்காலிகமாக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
காணி உரிமையாளரின் ஒப்புதல் இல்லாமல் அல்லைப்பிட்டி ஜெ 10 சேவகர் பிரில் 7 பரப்பு காணியும், மண்கும்பான் ஜெ 11 சேவகர் பிரில் 8 பரப்பு காணியும் மற்றும் புங்குடுதீவு ஜெ 24 சேவகர் பிரில் 14.2 ஏக்கர் காணியும் கடற்படையினருக்கு சுவீகரிப்பதற்கான அளவீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் திட்டம் ஒன்று நில அளவை திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படவிருந்தது.
இருப்பினும் குறித்த இடங்களில்  ஒன்றுகூடிய காணி உரிமையாளர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்ப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து, காணி அளவீட்டு நடவடிக்கைகளை தற்காலிகமாக கைவிட்டுவிட்டு செல்வதாக கூறிவிட்டு நில அளவைத் திணைக்களம் அவ்விடத்தில் இருந்து சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
spot_imgspot_img

More like this
Related

ப்ரைட் ரைஸ் வாங்கி வந்து மனைவியின் கதையை முடித்த கணவன்

ரக்வான பகுதியில், குடிபோதையில் வீடு திரும்பிய சிவில் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்...

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 15,000 ரன்கள்: டெண்டுல்கர் சாதனையை முறியடித்த கோலி

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி, சர்வதேச ஒருநாள்...

துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலி

பத்தேகமவின் ஹல்பேதோட்ட பகுதியில் நேற்று (27) காலை நடந்த துப்பாக்கிச் சூட்டுச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்