முழுமையாக தடுப்பூசி போடப்படாத நபர்கள் பொது இடங்களுக்கு செல்வதை தடுப்பதற்கு சட்டரீதியான தடைகள் இல்லை என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இது தொடர்பில் தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வார் என நம்புவதாக தெரிவித்தார்.
நாட்டில் இவ்வாறான ஒழுங்குமுறையை அமுல்படுத்துவதற்கு சட்டச் சிக்கல்கள் எதுவும் இல்லை என்பதை சட்டமா அதிபர் உறுதிப்படுத்தியதாகவும் அமைச்சர் கூறினார்.
பல அபிவிருத்தியடைந்த நாடுகள் இதேபோன்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அமைச்சர் ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
புதிய சட்டம் அமலுக்கு வந்த பிறகு, முழுமையாக தடுப்பூசி போடப்படாத நபர்கள் பொது இடங்களுக்குள் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அமைச்சர் கூறினார்.




