அருட்தந்தை சிறில் காமினி கைது செய்யப்பட மாட்டார்!

Date:

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் அண்மையில் தெரிவித்த கருத்துக்காக அருட் தந்தை சிறில் காமினி கைது செய்யப்பட மாட்டார் என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்று உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கில் சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ரொஹந்த அபேசூரிய இதனை தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் அருட்தந்தை சிறில் காமினி கைது செய்யப்பட மாட்டார் என குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் எழுத்துமூலம் நேற்று சட்டமா அதிபருக்கு உறுதியளித்ததாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ரொஹந்த அபேசூரிய நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் அண்மையில் அருட்தந்தை சிறில் காமினி மற்றும் ஏனைய தரப்பினர் முன்வைத்த குற்றச்சாட்டுகளை நிராகரித்து, அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னிலையாகுமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்தால், அருட்தந்தை சிறில் காமினிக்கு அண்மையில் அழைப்பு விடுக்கப்பட்டது.

எனினும், குறித்த சந்தர்ப்பத்தில் அவருக்குப் பதிலாக அருட்தந்தையர்கள் 3 பேர் முன்னிலையானதுடன், வாக்குமூலம் வழங்குவதற்காக அருட்தந்தை சிறில் காமினிக்கு ஒரு வாரக் கால அவகாசம் வழங்குமாறு கோரியிருந்தனர்.

இந்த நிலையில், குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் தான் கைது செய்யப்படுவதை தடுக்கும் வகையில் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி, அருட்தந்தை சிறில் காமினி உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த மனு இன்று காலை விஜித் கே.மலல்கொட, பீ பத்மன் சூரசேன மற்றும் எல்.டி.பி தெஹிதெனிய ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த மனு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

வட்டமடு விவசாயிகளுக்கு இன பாகுபாடு- கல்முனை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

வட்டமடு விவசாயிகளின் வாழ்வாதார நிலங்களில் விவசாயம் செய்வதற்குத் திருக்கோவில் பிரதேச செயலாளர்...

சர்வதேச மொழிபெயர்ப்பு தினம்: யாழ். பல்கலைக்கழகத்தில் மொழிபெயர்ப்புக் கண்காட்சி ஆரம்பம்

சர்வதேச மொழிபெயர்ப்பு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கண்காட்சி, சர்வதேச மொழிபெயர்ப்பு...

ராஜ் சோமதேவ அறிக்கை தாமதம்! செம்மணி புதைபுழி வழக்கு ஒத்திவைப்பு

செம்மணி புதைகுழி தொடர்பான வழக்கு இன்று யாழ் மேலதிக நீதவான் லெனின்குமார்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்